ஒரு உலகம் வேண்டும்,
அதில் மீண்டும் நீ என் மகளாய் வேண்டும்..
ஒரு இதயம் வேண்டும்,
அது முழுக்க நீ மட்டும் வேண்டும்..
இரு கண்கள் வேண்டும்,
அதில் நீ மட்டும் நிறைந்திருக்க வேண்டும்..
ஒரு நெஞ்சம் வேண்டும்,
அதில் நீ மட்டும் உறங்கிட வேண்டும்..
என் வாழ்வில் என்றும் சந்தோசம் வேண்டும்,
அதை நீ மட்டும் தந்திட வேண்டும்..
உன் நினைவுகள் கரையாத அளவிற்கு கண்ணீர் வேண்டும்,
அதை துடைக்க உன் கரங்கள் வேண்டும்..
என் விழி நீரை துடைத்தால் உன் பிஞ்சி விரல்களுக்கு
வலிக்கும் என்று என் விழியும் இதயத்தை முற்றுகை இட்டது நீ என் பாரத்தை ஏற்றுகொள் என்று...!!
இதயம் சொன்னது நான் துடிப்பதும் அவளுக்கென்று,
என் இதயமும் அவள் வசப்பட்டது..,
இன்று நான் செய்வதறியாமல் துடிக்கிறேன்..
வார்த்தை இல்லாமல் முடிக்கிறேன்...!!!!
No comments:
Post a Comment