என் செங்குருதி என் கண் வழிந்து,
என்னை நகையாடுது,
ஒரு அழகிய கதை பேசுது.
சில்லரை மானிட,
நீ வளரனும் மதியால் முழு மதியாய்.
உன் கண் கொண்ட கனவுகளை நீ கிழிக்கணும்.
அது கனவில்லை கற்பனை அதை உணரனும்.
உயிர் கொடுத்து உயிர் வளர்த்தாய் கற்பனைக்கு, இனி
அது உயிர் குடிக்கும் உன்னை விடுவதற்கு.
சோகத்தை சுகமாய் நீ ஏற்கலாம்,
ஒரு பொழுதும் சுகம் சோகத்தை வீழ்த்தாது.
இதை அறியாமல் ஜீவிப்பதும் ஆகாது.
No comments:
Post a Comment