Pages

Wednesday, January 25, 2012

என் தங்க மகளே...!!!


தங்க மகளே,
எந்தன் அன்பின் மொழியே,
என் நாலாறு வயதில் மூவாறு வயதோடு நான் கொண்ட என் அன்பு மகளே.

வானின் திரையை நீக்க வந்தாயே இந்த வசீகர நன்னாளில் எங்கள் வாழ்க்கையின் பரிசாக .
மகரந்த தேனின் சுவையை எந்தன் செவி அறிந்தது உந்தன் செந்தமிழில்.
கரு முத்து கல்லை முதல் முதல் கண்டேன் உந்தன் கரு விழியில்.
சிகரங்கள் எல்லாம் உன் காலில் சரணடையுதே உந்தன் சிந்தையால்.

எந்தன் பகலும் பௌர்ணமி காணுதே உந்தன் எழில் முகத்தில் .
மலர்கள் எல்லாம் ஒற்றை காலில் நிற்க்கையில்,
மதுரை மல்லிகை மட்டும் கொடியாய் படர்ந்தது என் மகள் மேல் விழுந்து இன்னும் புகழ் பெற தானோ?

என்னை போல் உன்னை பிரிய முடியாமல் தவிப்பில் கொட்டி தீர்க்குதே மழையை இந்த சித்திரை மேகம்.

உலாவரும் ஒத்த நிலா ,உலகத்திலே முதல் பூத்த பகல்  நிலா.,என் மகள் இவள் தானே அந்த நிலா.

தினமும் நிலவில் நான் காணும் பொலிவும், என் இதழ் காணும் சிரிப்பும், மனம் காணும் மகிழ்ச்சிக்கும்.
நீ தானே முதல் காரணம்...


கன நேர பிரிவும் என்னை கண்டங்கள் கடத்துதே,
எந்தன் உயிர் பதிந்த உந்தன் உருவம் மட்டுமே என்னை ஓடும் தண்ணீரின் நிழல் போலே எந்நாளும் உன்னை நான் பிரியாமல் செய்யுதே.

மகள் என்ற உறவின் ஆழத்தை நீ காட்டினாய்,
உறவு பிச்சையின் விசுவாசம் நான் காட்டுவேன்.
பாசம் பரிவு வேறு வேறு என்று நீதானே புரிய வைத்தாய்.
அன்பு மட்டுமே ஆட்சி செய்யும் உள்ளம் தான் நீ கொண்டாய்.


பாலையிலும் நீர் சுரக்கும் உன் பாதம் பட்டாலே.
வறண்ட பாறைகளும் கண்ணீர் சிந்தும் பொரமயினாலே.
பூமியே இருளின் பிடியில் நான் மட்டும் உன் நினைவின் மடியில்.
அன்பு என்ற சொல்லின் அர்த்தமும்,
உறவு எனும் உண்மையின் முழுமையை உணருகிறேன் புதிதாய் பிள்ளையின் பாசத்தால்.


நத்தையோட கூடுபோல ஒவ்வொரு நொடியும் உன்னை காப்பேன்.
என் காலம் போன கடைசியிலும்,
உயிரும் உயிர் வேண்டும் தருணத்திலும் கசக்கி பிழியும் நேரத்திலும் என் கடைசி துளி ஜீவன் கூட உனக்காக தானே வழிந்தோடும்.

என் கண்ணுக்குள்ள ஒரு கருவை போல எந்நாளும் உன்னை சுமப்பேன்.
நமது இந்த உறவை காலங்கள் பேசணும்.
பல பாதைகள் கடந்து என் பிள்ளையை நான் பார்க்கணும்.
ஒவ்வொரு மக்களும் உன்னை போற்றிட கேட்கணும்.
இது நடக்கையில் நான் உன் புறம் நின்று உன் புகழ் பாடனும்.
நடக்கும் சூழ்நிலை மாறும் எல்லாம் நன்மையாய் முடியும்.
முடிவில் உந்தன் வெற்றி மட்டுமே முன் நிற்க்கும்…!!!

No comments:

Post a Comment