காலம் தந்த பரிசு நீயே என் தங்கை ராணி,
என் நட்பு தந்த நட்சத்திர தேனே.
சோதனை சூழ்ச்சி செய்தபோது நீ மீண்டிட முச்சடைக்கவில்லை,
யார் செய்த பாவமோ நீ வலி சுமந்திட விதி செய்தது
ஆனால் நீ செய்த புண்ணியம் விதியை விழ்த்தி வென்றது.
முதல் முறை என் பேச்சும், என் எழுத்தும் ரசிக்க
படுவதை உன் ரசனையில் கண்டேன்,
நானும் புதுமையை புதிதாய் உணர்ந்தேன்,
நாட்களை சுகமாய் கடந்தேன்,
உன் கிருக்குதனத்தையும் கோபம் இன்றி சிரித்தேன்,
இது தொடராமல் போக வழி தேடி அலைந்தேன்.
ஒரு தெளிவை நீ காணும் காட்சி, அன்று நீ அடையும்
எழுச்சி, அதை நான் காணும் மகிழ்ச்சி அதுவே உன் வெற்றியின் சாட்சி.
நீ காணும் உலகம் உண்மையும் இல்லை,
விட்டொழித்த உலகம் வெறுமையும் இல்லை.
உன் சுதந்திரத்தை தட்டி பறிக்க நான் வெள்ளையனும்
இல்லை,
உன் காலை தட்டிவிட்டு தாங்கி பிடிக்க காந்தியும்
இல்லை.
நீ முன் கண்ட உலகத்தில் இப்போது வாழும் ஒரு உயிர்.
நீ தடுமாறாமல் வாழ என்னும் ஒரு மனம்.
உன் பெருமையை உன் முதுகுக்கு பின்னால் பேசும் ஒரு
உள்ளம்.
நாள் ஒரு வண்ணமும், பொழுதொரு நிலவாய் நீ வளரனும்
உன்னை கழுத்து வலிக்க நிமிர்ந்து நான் பார்க்கணும்..!! .
No comments:
Post a Comment