பௌர்ணமி நிலவும் என் பிள்ளையிடம் ஒவ்வொரு முறையும்
தோற்று அது மறைய தொடங்கியது.
பாவம் மீண்டும் மீண்டும் தன்னை பொலிவேற்றிகொண்டு
வந்தாலும் அவமானத்தில் என் மகளின் கால்களில் விழுகிறது..
மழையின் வடிவாய் அழுகிறது...
நிலவு செய்யும் தற்கொலை முயற்ச்சிதான் கிரகணமோ....!!!!
யார் அறிவார்..!!
ஆயிரம் ஆயிரம் புதுமைகளை படைத்த பூமியே என் மகளின்
கால்களின் கீழ் தான் சுழல்கிறது...!!!
No comments:
Post a Comment