Pages

Wednesday, January 25, 2012

என் தங்க மகளே...!!!


தங்க மகளே,
எந்தன் அன்பின் மொழியே,
என் நாலாறு வயதில் மூவாறு வயதோடு நான் கொண்ட என் அன்பு மகளே.

வானின் திரையை நீக்க வந்தாயே இந்த வசீகர நன்னாளில் எங்கள் வாழ்க்கையின் பரிசாக .
மகரந்த தேனின் சுவையை எந்தன் செவி அறிந்தது உந்தன் செந்தமிழில்.
கரு முத்து கல்லை முதல் முதல் கண்டேன் உந்தன் கரு விழியில்.
சிகரங்கள் எல்லாம் உன் காலில் சரணடையுதே உந்தன் சிந்தையால்.

எந்தன் பகலும் பௌர்ணமி காணுதே உந்தன் எழில் முகத்தில் .
மலர்கள் எல்லாம் ஒற்றை காலில் நிற்க்கையில்,
மதுரை மல்லிகை மட்டும் கொடியாய் படர்ந்தது என் மகள் மேல் விழுந்து இன்னும் புகழ் பெற தானோ?

என்னை போல் உன்னை பிரிய முடியாமல் தவிப்பில் கொட்டி தீர்க்குதே மழையை இந்த சித்திரை மேகம்.

உலாவரும் ஒத்த நிலா ,உலகத்திலே முதல் பூத்த பகல்  நிலா.,என் மகள் இவள் தானே அந்த நிலா.

தினமும் நிலவில் நான் காணும் பொலிவும், என் இதழ் காணும் சிரிப்பும், மனம் காணும் மகிழ்ச்சிக்கும்.
நீ தானே முதல் காரணம்...


கன நேர பிரிவும் என்னை கண்டங்கள் கடத்துதே,
எந்தன் உயிர் பதிந்த உந்தன் உருவம் மட்டுமே என்னை ஓடும் தண்ணீரின் நிழல் போலே எந்நாளும் உன்னை நான் பிரியாமல் செய்யுதே.

மகள் என்ற உறவின் ஆழத்தை நீ காட்டினாய்,
உறவு பிச்சையின் விசுவாசம் நான் காட்டுவேன்.
பாசம் பரிவு வேறு வேறு என்று நீதானே புரிய வைத்தாய்.
அன்பு மட்டுமே ஆட்சி செய்யும் உள்ளம் தான் நீ கொண்டாய்.


பாலையிலும் நீர் சுரக்கும் உன் பாதம் பட்டாலே.
வறண்ட பாறைகளும் கண்ணீர் சிந்தும் பொரமயினாலே.
பூமியே இருளின் பிடியில் நான் மட்டும் உன் நினைவின் மடியில்.
அன்பு என்ற சொல்லின் அர்த்தமும்,
உறவு எனும் உண்மையின் முழுமையை உணருகிறேன் புதிதாய் பிள்ளையின் பாசத்தால்.


நத்தையோட கூடுபோல ஒவ்வொரு நொடியும் உன்னை காப்பேன்.
என் காலம் போன கடைசியிலும்,
உயிரும் உயிர் வேண்டும் தருணத்திலும் கசக்கி பிழியும் நேரத்திலும் என் கடைசி துளி ஜீவன் கூட உனக்காக தானே வழிந்தோடும்.

என் கண்ணுக்குள்ள ஒரு கருவை போல எந்நாளும் உன்னை சுமப்பேன்.
நமது இந்த உறவை காலங்கள் பேசணும்.
பல பாதைகள் கடந்து என் பிள்ளையை நான் பார்க்கணும்.
ஒவ்வொரு மக்களும் உன்னை போற்றிட கேட்கணும்.
இது நடக்கையில் நான் உன் புறம் நின்று உன் புகழ் பாடனும்.
நடக்கும் சூழ்நிலை மாறும் எல்லாம் நன்மையாய் முடியும்.
முடிவில் உந்தன் வெற்றி மட்டுமே முன் நிற்க்கும்…!!!

என் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!!!!!


என் அருமை தோழியே.
நீ உன் வீட்டு ராணியே.
தை மாதம் வந்த சேலத்து மாங்கனியே.
பொக்கிஷமாய் கிடைத்தவலே.
பொக்கிஷம் தான் உன் பெயரோ.
மல்லிகை தான் உன்  மனமே.
காந்தள் பூவின் வகை நியே.
குரலில் குயிலும் நீ, செயலில் மலையும் நியே.
மங்கை வடிவம் கொண்ட மயிலே.
ஜொலிக்கும் தங்கமும் நியே.
வினையறுக்க துடிக்கும் சிங்கம் நீ.
சுட்டெரிக்கும் கண்கள் போதுமே பகைவர் நிழலும் போசுங்குமே.
முறைத்து பார்த்தல் சுழல் கற்று நீ,
அன்பு கேட்டல் அணைப்பதில் தாயும் நீ.
உன் பெருமைகள் பேசிட மொழிகள் இல்லையே என்னிடம்.
எனினும் உன் வாழ்க்கை வழியில் சிறு துரம் பயணம் கொண்டேன் போதும் அதுவரை.
மஞ்சள் மகள் உன்னை தோழி என்று பெருமை கொள்வதா.
இல்லை தங்கை என்று நான் தைரியம் கொள்வதா..!
காணும் பொங்கலாய் உன் பிறந்தநாளை உலகமே கொண்டாடிட.
வார்த்தையின் வழியாய் இங்கு நான் துடங்குகிறேன் முதலில்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!!!!

என் தாலாட்டு...!!


ஆராரோ ஆரிரரோ தாலாட்டு ஒன்னு நா பாட.
ரத்தினமே நீ கேட்டு கண்ணுறங்கி இந்த நாளை இனிதாய் முடித்திடு.
பாத்து மாதம் பத்திரமா உன்னை போகிஷமாய் காத்திரிந்தோம்.
நள்ளிரவில் விழிக்கும் எந்தன் விழிகள் சற்றும் சிமிட்ட மறந்து உன்னை ரசிபதேனோ…!!!
அழகு பிள்ளை கண்ணுறங்கும் வேளையிலே ஓடி வரும் வெண்ணிலவே.
அவள் கன் விழிக்குமுன்னே வேறு திசை ஓடி போவதேனோ…!!!
என் வேண்டுதலை ஏற்று வந்த வைரம் அம்மா நீ.
ஒரு நொடியும் திவிட்டாத அமிர்தமடி நீ.
தத்தி தத்தி நடக்கும் ஒவ்வொரு அடியும் பிரமாண்டம் தானே.
கையில் சிக்கிடாமல் ஓடுகையில் நீ புள்ளி மானடி.
கேட்டாமல் முத்தம் வேய்கையில் நீ மழலை சாமி தானடி.
நீ அர்த்தம் இன்றி அழுதாலும் என் நாடி நடுங்கி போகுதே.
அடி நீ சத்தம் இன்றி சிரித்தாலும் விண்மீன்கள்   விழுகுதே.
என்ன செல்லமான பூ உன்னை வாடாமல் காப்பேன்னடி. 
காணத நாள் வந்தால் மடிந்தே போவேனடி.
நீ வளர்ந்தும் பச்சிளம் பிள்ளையே என் பார்வையில்  நிற்பதேனோ.,
முத்தமிழியின் வாடை படாத நான்,
என் முழு நிலவு உன்னை என் எழுத்தில் வரைந்தேனடி..
படைப்புகள் எல்லாம்  உனக்கென படைத்தேன்..
இருப்பதும் கூட உனக்கென மட்டும்..
உயிர் நீ இன்றி உயிர் ஒன்று எதற்கு..
நான் தனிமையில் நின்றால் இடி என் தலையினில் முட்டும்.
அந்த இடியினை முட்டிட இந்த அப்பனுக்கு உதவிடு.....!!!

முயற்சி திருவினையகாது...


எந்த முட்டாள் சொன்ன வரிகளோ இது....
    "முயற்சி திருவினையாகும்"
அவளை மாறாக முயன்றேன் ஒரு வினையும் பிறக்கவில்லை இன்னும்...!!!!

நட்பும் காதலும்...!!!!


கடைந்து எடுத்த புனிதமாய் நட்பு..
அதில் கடுகளவு காமம் கலந்தது காதல்...!!!!

என் கடந்த ஆண்டு...!!!


முடிஞ்சிபோன வருஷம் நா பாத்தேன் பல புதுமைகள,
வெறுத்துப்போன புத்தாண்டு,
பல் வெல்க கூட வக்கிலாம வீணாப்போன பிறந்தநாளு.
தை பொங்கல் முடிஞ்ச கையா சுதந்திரம்போல்  நடுநிசியில கெடச்சிது என் புது உலகம்.
என் குட்டு செந்ததினால் என் குட்டளிகும் காயமுடா,
கண்ணிருந்தும் குருடி ஒருத்தி என்ன பொய் காதலிச்சி காயம் ஆன,
வீட்டுல கெடச்சது  வெட்டி பயன்னு  பட்டமும் தான்.
விரதம் இருந்து, காவடிதூக்கி கண்ட படி வேண்டி  நானும்,
கடைசியில கண்டுபிடிச்சேன் கடவுளுன்னு யாரும் இல்ல.
விட்ட கொற தொட்ட கொற வருமானமும் வீனா போச்சி.
என் ஆத்தாவோட வாய் முகுர்த்தம் வேள தேட வலியும் வந்தது.
சிரிக்க வெச்சி சிறிச்சிருந்தேன்,
யாரும் அரியம பாதி வருஷம் அழுதிருந்தேன்.
வாணம் போடுது வாழ்த்து துரளா.
இடி மின்னல் சேந்து போடுது தாளம் தான்.
தேன் இருக்கு கூடிருக்கு கூட்டுக்குள்ள தேனில்ல.
இதழிருக்கு சிரிபிருக்கு நெஞ்சிக்குள்ள ஆளே இல்ல.
கன்னத்துல வெச்ச முத்தம் போல நிமிஷத்துல எல்லாம் கானவில்ல.
நா பாசம் வெச்ச உசுரு குள்ள என் நெனப்பு ஏதும் போகலையே.
சனி என்ன பிடிகலயே, சனி பகவான நா பிடிச்சேன்.
நல்லதுக்கு இங்க காலம் இல்ல.
பொய் பேச்சிக்கும் வெளி வேஷத்துக்கும் வாழ்த்துகள் கோடி உண்டு.
அட சொகத்த கொட்டி தீக்க வர்த்த ஒன்னும் சிக்கவில்ல,
ஆத்திரத்த அழுது கரைக்க ஏன்னோ இங்க முடியவில்ல.
அறுதல் சொலும் ஆளுக்கோ அந்தளவுக்கு நேரம் இல்ல.
போதுமட போதும்.
தனிய ஓடி போக வேணும்.
ஆசை படி அனாதை இல்லம் ஆரமிக்க,
வாழுற என் சாமிகள உதவிட நா கேட்குறேன்.
பாசம் மட்டும் வேணுமுன்னு அசை பட வேணாமுன்னு என்ன நானே கேட்குறேன்..
எதார்த்தமா வழ்ந்துகட்டுவேன்..
வாழ்க்கையோட ரூட்ட மாத்துவேன்..!!!!

விவசாயி...!!!


கலப்பையை கையில் எடுத்து உழுபவன் உழவன்,
விதை விதைத்து நாத்து நடுபவனும் அவனே.
களை எடுத்து உரம் போடுபவனும் அவனே..
அறுவடையும் அவன் செய்வான்...
விலை நிர்ணயம் செய்யுதல் மட்டும் அவனுக்கு பரமோ..??
இந்த அரசு செய்வது நியாயமோ....!!!

இவை எல்லாம் வேண்டும்....!!!


கஷ்டத்தில் கட்டி அணைத்திட நண்பன் வேண்டும்.
சதுரங்க அடத்தின் ராணி போல் தோழியும் வேண்டும்.
என் வலிதனை புலம்பிடும் வேளையில் உணர்ந்து தழுவிட தந்தையும் வேண்டும்.
தெளிவுடன் அன்புடன் அன்னையும் வேண்டும்.
நான் அழுது கதறிட,துக்கி வளர்த்திட தங்கை வேண்டும்.
என்னை விரும்பிடும் பிள்ளையும் வேண்டும்.
ஆண்டவன் என்பவன் நிஜத்தினில் வேண்டும்.
பாசமும் பந்தமும் நன்று தொடர்ந்திட வேண்டும்.
சேற்றிலே பூத்திடும் செந்தாமரை போலே, புன்னகை என்றுமே இருந்திடல் வேண்டும்.
அகிணி குழம்பாய் ஏமாற்றம் கொண்டாலும்,
இமையம் போலே நின்றிடல் வேண்டும்.
முத்தமும் சத்தமும் ரத்தமாய் வேண்டும்.
இதில் கண்டதை கொண்டிடும் பிறந்தநாள் வேண்டும்.

காதல் வந்துடிச்சி...


காதல் வந்துடிச்சி,
கவலையே இங்கு இல்ல,
கலர் கலர் கணவு கண்ணுல நிக்கிதே,
தேவதனு கேட்டுருக்கேன் ..!!
இபோ குட நின்னு பாத்துருக்கேன்..!!
பனி துளி தான் துயிமையின,
அவ சிறிப நா என்ன சொல்ல…!!!
அடி பட்ட காயம் குட கொஞ்சமும் வலிகலயே,
அவ குட இருந்து பாதத்தால..
பிரிண்ட்ஸ் எல்லாம் சொலுரங்க காதல் ஒரு இன்சுரன்சு,
காதலி கிளைம் பண்ண கொன்னுடுவ..!!!
நா சொனது ஒன்னு மட்டும் .,
நீங்க பாத்தது எல்லாம் பொன்னு இல்ல.,
என் குட இருக்கவா தாய்ய போல…!!!!!

மன்னிப்பு...


மன்னிப்பு வெறும் வார்த்தை இல்லை.
கணவன் மனைவிடம் கேட்கையில் சரணடைதல்.
பிள்ளை தாயிடம் கேட்கையில் அடைக்கலம்.
காதலி காதலனிடம் கேட்கையில் அன்பு.
நண்பன் நண்பனை கேட்கையில் தஞ்சம்.
அண்ணன் தங்கையை கேட்கையில் தவிப்பு.
என்னை நானே கேட்கையில் தலை குனிகிறேன்,என் உயிரை விட உயர்ந்த எனது  உயிர்களுக்காக..

என் பாசமலருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!


மலரே என் பாசமலரே..
நடமாடும் பூந்கோதே, நந்தவன பூங்கொடியே..
உன் பாதம் பட்டால் பாறை கூட பூந்சொலை   படைக்கும்..
ரெட்டை கால் கொண்ட தாமரையே,
நீ பாவனை வரும் வைரமடி..!!!
நீ தொட்டதெலாம் பொன்னாகும்.,
மிச்சம் எல்லாம் மண்ணாகும்..!!!
வெற்றியை விம்பாய் பறித்திடு..
காலம் கட்டளையிட காத்திருக்காதே..
உனது எதிரிக்கு உன் பயத்தை பரிசலி.
உன் தோழிக்கு வெற்றியை வாரி ஏரை..!!
உடலில் அடைக்கப்பட்ட உயிராய் மட்டும் இருக்காதே.
பூலோக ஜலிக்கட்டில் இறக்கி விட்ட காளை போல் சீறி பாய்ந்திடு..
எதிர் நிற்பவரை ரயில்போல் முட்டிடு..
ஏமாற்ற நினைத்தாள் உன் வெற்றியைகொண்டு இருளில் புதைத்திடு..
பகுத்தறிவு பெரியாரின் தவமாகும்..!!!
கலப்பை உழவனின் பரிசாகும்...!!!
நீயோ நான் கொண்ட வரமாகும்...!!!
இந்த நாளோ அந்த வரத்தின் வரமாகும்...!!!!! 

பிரியும் தந்தைக்கு ஒரு மடல்...!!!


அன்பென்னும் உணர்வை அழகுடன் உணர்ந்தேன் என் தந்தையின் கண்களிலே.
தோல்வியை நான் கண்டதில்லை உங்கள் தோள்களில் நான் நின்றதினால்.
தாய் அவள் சுமந்தது மாதங்கள் மட்டுமே.
நீ என்னை சுமப்பதோ நீ உள்ளவரை.
பிஞ்சு வயதில் நான் பொம்மை மீது கொண்ட மோகத்தினால் பிரிந்தேன் உன்னை.
இளமையில் நட்பின் மீது கொண்ட காதலினால் உன்னை மறந்தேன் நான்.
இன்றோ நெஞ்சு நிரம்பி வழியும் அன்பைக்  காட்டும் முன்பு மணமாலை  கொண்டேன்,
இத்தனை வருடமும் என் சாமியிடம் பேசிட பல நாட்கள் வரும் என்று வார்த்தைகளை புதைத்து வைத்தேன்.
தேடிய நாள் வருமுன் உன்னை நான் பிரிந்திடும் நாள் வந்ததே.
இன்று நான் கேட்க நினைக்கும் மண்ணிப்புக்கூட,
உமக்கு மரணத்தின் வலியை தருமே.
உமது கால்களை கட்டி என் காலம் எல்லாம் போகணும்,
ஆனால் போகிறேன் கால்களை தொட்டு காலம் எல்லாம் வாழ்ந்திட. . .!!!

என் செல்ல குழந்தை......!!!!!!!!!


என் செல்ல குழந்தையின் அழகு சிரிப்பிலே உறைந்து போனேன் நான்.
உறைந்து போனதால் அவள் உதறி போகிறாளே.
அவள் இருந்தும் இலையோ சிதறி போகிறேன் நான்.
சிதைந்து போனது தந்தை என்பதை அவள் அறியவில்லையோ.
பாவம் பிள்ளை அவளை பிரிந்து செல்வது பாவம் ஆகுமே.
நான் அவளை அன்பாய் காக்க மட்டுமே பிறந்துவந்த  காவலாளி தானே.
குருவி கூட்டைக்காக்கும் மரம் அது பாரம் அறியாதே...!!!!

வெறுமை...!!!


பாசமும் நேசமும் படை சுடி நான் நிற்கையில்.
வேஷம் என்று நீ உன் வழி நடக்கையில்.
வாசலே இன்றி நான் வாழ்கிறேன் வானமே.
பாசமாய் இன்று நீ அழுதிடல் தாங்கவே இல்லையே என் நெஞ்சமே என்னிடம்.
அப்பன் என்று கூறி அவள் ஆணை இட்டால்.
ஆண்டவனை கட்டி அவள் கால் அடியில் சேர்த்திடுவேன்.
பிள்ளை அவள் ஆசைதனை பிரிந்திடவே பாசமுடன்..
பாவி இன்று என்ன செய்வேன்...!!!

காதல் தோல்வி...!!!


என் காதலியின் நிழலை நான் இருந்தேன்,
பின்பு ஒன்றாய் உருமாறினோம்..
எனது உயிர் துளியாய் உறைந்தவள் அவள்..
இன்றோ என் கடவு சொல்லாய் மட்டும் இருபதேனோ...!!!   

சங்கடங்கள் தீரவேண்டி...!!!


அன்பு என்பது அலட்சியம் ஆகுதே நான் அன்பு கொண்டவருக்கு,
சமயோக சாத்திரத்தை சுழ்ச்சமமாய் கண்டுகொண்டு செயல்பட்டால் சங்கடங்கள் தீருமடா...!!!!  

முடிவின்றி ஓடுகிறேன்....!!!!


கண்ணுக்குள் அணை கட்ட வழி இன்றி ஓடுகிறேன்..
வழியும் நீரை தேக்கி வைத்து தற்கொலை செய்திட வழின்றி வாழுகிறேன் ..!!!!

விடை கொடு...!!!!


இறங்கும் இடியின் உக்கிரத்தை கூட தாங்கும் என் நெஞ்சம்,
எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தில் மட்டும் மலிவாய் மாண்டுபோவது ஏன்...!!!!  

வறுமையை ஒழிப்போம்...!!!!


புழுதி காற்று.,
புயல் மழை..
புழுத்த அரிசி.,
சித்திரை சூரியன் குடிசையை கொளுத்தும், அப்பட்ட அரசியல் இதை தடுக்க மறுக்கும்.
ஐபசி அடை மழை குடிசையை கப்பல் விடும்.,
ஏழைகள் என்பதால் சூரியனும் ஒதுங்கும்..
இந்த பாகுபாட்டை ஓடிகிட வழி காட்டும் கருவி எங்கே..!!!
பசிக்கு உணவும்.,
மானம் கற்றிட மட்டும் உடையும் இது கிடைப்பதே  பெரும் வரமோ.!
இதை மாற்றிட ஒரு தவம் செய்வோம்..
கண்ணை கட்டி காலை ஓடிகி அமர்ந்தல்ல  …!!!!!!!
வறுமையை எரித்தி.,
கொடுமையை கொன்று.,
புதுமையை படைப்போம்..
சுதந்திர இந்தியாவை அன்று முதலில் காண்போம்…!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்..


உலககொபைக்கு பின்,
உலகமே போட்டியும் பாகுபாடும் இன்றி கொண்டாடும் ஒரே திருவிழா..,
           "புத்தாண்டு"
கடந்த ஆண்டில் விட்டதை.
பிறந்த ஆண்டில் முடித்திடுவோம்...!!!
அன்பர்களே இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சுதந்திரம்..!!!!


வரம் என்ற சொல்லுக்கு பொருள் இந்த இனமே.
அதிலும் புகல் என்று சொன்னால் பாரதத்தாயின் மடி கண்ட பிரபே,
இந்தியன் என்பதை தலை நிமிர்ந்து சொல்,
தமிழன் என்பதை தலை எடுத்து சொல்.
கலாச்சாரம் பிறந்த தேசம் இதுவே,
வரலாற்றுக்கு வரலாறு கற்பிக்கும் மண்ணும் இதுவே,
பொறுத்தார் பூமி ஆல்வார் என்ற வாக்கியத்தை மூவண்ண கோடியை வான் உயர்த்தி முழக்கம் இட்ட இந்த நாளை நாம் வணங்கி மக்ழிவோம்.

மகள்.......!!!


இங்கு என் உலகத்தில் மட்டுமே,
மகள் தந்தையை தத்து எடுத்தாள்.
அவள் தானே என்னை தாலாட்டினால்.
அந்த நாள் முதல் எனக்கென வரும் சந்தோசம் எல்லாம் அவளுடமை,
சோகமும் சாபமும் என் உடைமை.
அவள் போட்ட இந்த பாச பிச்சைக்கு நான் இந்த மண்ணில் உரமாகும் வரை அவளை அவள் விரல் நக  கண்களில் கூட கண்ணீர் வராமல் காப்பேன்.

செங்குருதியின் கதை..!!


என் செங்குருதி என் கண் வழிந்து,
என்னை நகையாடுது,
ஒரு அழகிய கதை பேசுது.
சில்லரை மானிட,
நீ வளரனும் மதியால் முழு மதியாய்.
உன் கண் கொண்ட கனவுகளை நீ கிழிக்கணும்.
அது கனவில்லை கற்பனை அதை உணரனும்.
உயிர் கொடுத்து உயிர் வளர்த்தாய் கற்பனைக்கு, இனி அது உயிர் குடிக்கும் உன்னை விடுவதற்கு.
சோகத்தை சுகமாய் நீ ஏற்கலாம்,
ஒரு பொழுதும் சுகம் சோகத்தை வீழ்த்தாது.
இதை அறியாமல் ஜீவிப்பதும் ஆகாது.

பாசமலர்....!!!


காலம் தந்த பரிசு நீயே என் தங்கை ராணி,
என் நட்பு தந்த நட்சத்திர தேனே.
சோதனை சூழ்ச்சி செய்தபோது நீ மீண்டிட முச்சடைக்கவில்லை,
யார் செய்த பாவமோ நீ வலி சுமந்திட விதி செய்தது
ஆனால் நீ செய்த புண்ணியம் விதியை விழ்த்தி வென்றது.
முதல் முறை என் பேச்சும், என் எழுத்தும் ரசிக்க படுவதை உன் ரசனையில் கண்டேன்,
நானும் புதுமையை புதிதாய் உணர்ந்தேன்,
நாட்களை சுகமாய் கடந்தேன்,
உன் கிருக்குதனத்தையும் கோபம் இன்றி சிரித்தேன்,
இது தொடராமல் போக வழி தேடி அலைந்தேன்.
ஒரு தெளிவை நீ காணும் காட்சி, அன்று நீ அடையும் எழுச்சி, அதை நான் காணும் மகிழ்ச்சி அதுவே உன் வெற்றியின் சாட்சி.
நீ காணும் உலகம் உண்மையும் இல்லை,
விட்டொழித்த உலகம் வெறுமையும் இல்லை.
உன் சுதந்திரத்தை தட்டி பறிக்க நான் வெள்ளையனும் இல்லை,
உன் காலை தட்டிவிட்டு தாங்கி பிடிக்க காந்தியும் இல்லை.
நீ முன் கண்ட உலகத்தில் இப்போது வாழும் ஒரு உயிர்.
நீ தடுமாறாமல் வாழ என்னும் ஒரு மனம்.
உன் பெருமையை உன் முதுகுக்கு பின்னால் பேசும் ஒரு உள்ளம்.
நாள் ஒரு வண்ணமும், பொழுதொரு நிலவாய் நீ வளரனும் உன்னை கழுத்து வலிக்க நிமிர்ந்து நான் பார்க்கணும்..!!   .

என் நெஞ்சம்....!!!


மொட்டு வைத்த மலரும்,நட்டு வைத்த நட்ச்சித்திரமும் தொட்டு பறிக்க துடிக்குமே என் நட்ப்பை.
நட்பென்பது உயிர் இல்லை, உயிரை தாண்டிய ஒப்பற்ற ஒரே விழி காணும் உண்மை.
என் நெஞ்சத்தை குத்தி கிழித்து பார் என் மகளை காக்கும் சாமியாய் முன் நிற்பான்.

நலமாய் ஒரு இரவு....!!!!


பேசி பேசி நாவு வரண்டது.
நடுநிசியும் கடந்தது..
இந்த நாளின் நொடிகளை விட பேசிய வார்த்தைகள் அதிகம்.,
முடித்த பொழுதிலும் மனதில் பேசாத வார்த்தைகள் ஆயிரம் ஆயிரம் முடிகொண்டு நிற்குதே..!!
மீண்டும் ஒரு நாள் வருமோ. விட்டதை பேசிட, மற்றதை கேட்ட.,
இந்த நாளை நலமாய் முடித்திட….!!!

பட்டாம்புச்சி பெண்ணே...!!!!


பட்டாம்புச்சி பெண்ணே,
என் இதய தேனை குடிதவலே.
சிறு சிறு சிறகால் என்னை சிலுர்திட செய்தாய்.
விறு விறு வென்று ஒரு மயக்கம் என்னை சூழுதே.
இது கனவும் இல்லை கவியும் இல்லை புதிதாய் நீ அமைத்த ஒரு சூழ்ச்சி தானடி, முழுதாய் என்னை விழிங்கினாயே, முழுதாய் நானும் மயங்கினேனே.
கண்ணே நீ நகர்ந்தால் காற்று கூட பாரம் ஆகுதே.
விட்டு ஓடி வா, ஞானத்தை விட்டு ஓடி வா.
மதி மயக்கிய மாலை நேரம், உலகமே உறங்கும் தூரம்.
நிலவும் இலகும் நேரம், நாம் வார்த்தை இன்றி மௌனமாய் கோடி மொழிகள் பேசிடலாமே...!!!

ஏமாற்றங்கள் இது தானோ...!!!


எதிர் பாத்து எதிர் பாத்து என்னை நானே கொள்ளும் கடைசி கட்ட காட்சியும்.,
என்னுள்ளே எனக்காக என்னலே எழுதப் பட்ட கல்வெட்டும்.,
இல்லாத ஈசனை என் வரம் வேண்டி கிடப்பதும்.,
பித்து பிடித்த பாசத்தை பிள்ளை இடம் தேடினால்...!!!
இது அனைத்தும்தான் எமற்றன்களோ...!!!!            

அடிப்படை கல்வி !!!!!!


வரமான பிறப்பிது,
வைரமாய் வாழ்ந்திட,
தரமான கல்வியை,
தவறாமல் கற்கணும்,
மழலை கல்வியும் ,
இளமையின் கல்வியும்,
மகத்துவம் கொண்டது,
அறியணும் அறிவுடன்,
அறிந்தவன் ஆளுவான்,
மறுப்பவன் ஆளபடுவான்,
வீரியம் பெரிதட, இதை
புரிந்திட செய்யட,
ஆண்டவன் என்பவன்,
அடிப்படை கல்வியை தருபவன்,
கல்வியும் காதல் தான்,
உணரந்தவன் உயருவான்...!!!

ஜனநாயகமும் பரிதாபமும் !!!!


உலகமே போற்றும் ஜனநாயகம்,
உலகிலே பெரிய ஜனநாயகம்,
இங்கு மக்களுக்கு நடப்தோ அநியாயம்,
தட்டி கேட்க வேண்டியவர்களுக்கு தனி நியாயம்,
தட்டி கேட்பவர்களுக்கு வெறும் காயம்,
ஏழை மனசு எல்லாம் ஒரு பறவையும்,
இல்லா சரணாலயம்,
மற்றதை வேண்டி எல்லாம் செய்வோம் ஒரு பிழை,
இல்லா பிரளயம் ..!!!!!

என் தெய்வத்திருமகள்...!!!!


ஒரு உலகம் வேண்டும்,
அதில் மீண்டும் நீ என் மகளாய் வேண்டும்..
ஒரு இதயம் வேண்டும்,
அது முழுக்க நீ மட்டும் வேண்டும்..
இரு கண்கள் வேண்டும்,
அதில் நீ மட்டும் நிறைந்திருக்க வேண்டும்..
ஒரு நெஞ்சம் வேண்டும்,
அதில் நீ மட்டும் உறங்கிட வேண்டும்..
என் வாழ்வில் என்றும் சந்தோசம் வேண்டும்,
அதை நீ மட்டும் தந்திட வேண்டும்..
உன் நினைவுகள் கரையாத அளவிற்கு கண்ணீர் வேண்டும்,
அதை துடைக்க உன் கரங்கள் வேண்டும்..
என் விழி நீரை துடைத்தால் உன் பிஞ்சி விரல்களுக்கு வலிக்கும் என்று என் விழியும் இதயத்தை முற்றுகை இட்டது நீ என் பாரத்தை ஏற்றுகொள் என்று...!!
இதயம் சொன்னது நான் துடிப்பதும் அவளுக்கென்று,
என் இதயமும் அவள் வசப்பட்டது..,
இன்று நான் செய்வதறியாமல் துடிக்கிறேன்..
வார்த்தை இல்லாமல் முடிக்கிறேன்...!!!!

அழுகை..!!


உன் கண்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் கண்கள் கலங்கும்..
நீ வருந்தினால்..,
வருத்தத்தில்..!!
நீ கலங்கினால்..,
கலக்கத்தில்..!!
நீ சிரித்தல்..,
ஆனந்தத்தில்..!!
நீ ஏங்கினால்..,
துடிப்பில்..!!
நீ பிரிந்தால்..,
மறு கணமே என் கண்ணீர் உறையும்,
என் உயிர் உன்னை காக்க  என்னை விட்டு ஓடி வரும்..!!         
பிரியாமல்.. 
ரயில் தண்டவாளம் போல் உன்னுடன் கடைசி வரை.,
பயணிப்பேன்..,
இணையாமல்..,
பிரியாமல்..,
ஒரு காவலனாய் இறுதிவரை..!!

டார்லிங்...


வீசும் காற்றும் என் காதில் பேசும்..
உன்னை தீண்டியதை என் இடம் பெருமை பேசும்..
நீ விடும் மூச்சி கற்றும், தன் மூச்சை விடுகிறது உன்னை பிரியும் சோகத்தில்..
இந்த பூமி பந்து பிறந்த முதல் பல யுகமாய் காத்திருந்து படைத்த பொக்கிஷம் நீயே..
என் அருமை உயிரே..

பௌர்ணமி நிலவு...!!!


பௌர்ணமி நிலவும் என் பிள்ளையிடம் ஒவ்வொரு முறையும் தோற்று அது மறைய தொடங்கியது.
பாவம் மீண்டும் மீண்டும் தன்னை பொலிவேற்றிகொண்டு வந்தாலும் அவமானத்தில் என் மகளின் கால்களில் விழுகிறது..
மழையின் வடிவாய் அழுகிறது...
நிலவு செய்யும் தற்கொலை முயற்ச்சிதான் கிரகணமோ....!!!!
யார் அறிவார்..!!
ஆயிரம் ஆயிரம் புதுமைகளை படைத்த பூமியே என் மகளின் கால்களின் கீழ் தான் சுழல்கிறது...!!!             

மரணம்..


சுகம் தரும் மரணமே,
ஒரு முறை வா,
சுதந்திரம் தா..
பழகிய பால நெஞ்சம் பாம்பை மிஞ்சிய நஞ்சை என் நெஞ்சிலே சொட்டு சொட்டாய் விட்டது.
நம்மை நம்பும் கடவுளையும் நம்பினேன்.,
அவனும் அதையே செய்தான்..!!!

அரசியல்..


சகாப்தங்களை தாண்டி சரித்திரம் படைத்த சத்திரியர்கள் வாழ்ந்த மண்ணில்..,
இன்று சக சத்திரியனுக்கு சவக்குழி தோண்டும் சாணக்கியர்கள் தன் சரித்திரம் படைக்க தொடங்கியுள்ளனர்..
இன்னும் சில தினமே சாணக்கியனும் சவமாகுவான்,
தந்திர நரி என்னும் அரசியலில்..!!!         

ரோஜாவின் மகள்...!!!


ரோஜா மலரே,
உன் இதழ்கள் கருக தொடங்கும்.,
என் மகளை கண்ட தோல்வியில்..
நீயும் அழகு தான் என் பிள்ளை இருக்கும் திசை பக்கம் வராவிடில்...!!!
என் தேவதையும் கருணை கொண்டவள் தான்,
அவன் இட்ட பிச்சை தான் உன்னை சூடாமல் போகிறாள்..!!!

தவறவிட்ட தருணங்கள்..!!


அவளுக்கு நான் சேவகம் செய்ததில்லை.,
மார்கழி இரவில் என் நெஞ்சி கதகதப்பில் அவளை நான் உறங்க வைத்ததுமில்லை.,
அவள் செய்த மழலை குறும்பை நான் ரசித்ததுமில்லை.,
சோறுட்டும் வேலையில் "எனக்கு வேண்டா" என்று உதறி விட்டு அவள் பிஞ்சி கால்கள் ஓடிய அழகை பார்த்ததுமில்லை.,
என்ன நடந்த போதிலும்.,
நான் இத்தனையும் இழந்த பொழுதிலும்.,
இன்று என் அழகு மகள் "அப்பா" என்று அழைக்கும் வார்த்தையின் சுகம் ஒன்றே போதும் இந்த பிறப்பும் இடேரும்..!!!!          

நர பலி...!!!


யாரோ,
எவனோ.,
மண் உலகின் அரசனோ.,
தேவலோக உத்தம புருஷனோ.,
கடவுளோ.,
இல்லை அவன் அப்பனோ.,
எந்த அதிசய பிறவியோ.,
செய்கையில் அல்ல.,
பேச்சிலும் அல்ல.,
பார்வையிலும் அல்ல.,
விடும் முச்சு கூட என் மகளுக்கு எதிராய் போனால்..
சாகா வரம் கொண்ட சாமியே ஆனாலும்.,
அந்த ஈன பிறவிக்கு சரித்திரம் காணாத நரபலி என்  குழந்தையின் கால் முன்னால் நடக்கும்.!!!
பலி கொடுபவனும் நானாவேன்..!!
ரத்தம் குடிப்பவனும் நானாவேன்…!!

யார் வருவர்....!!!


பார்க்கும் கண்கள் இரண்டு,
என் மகளின் மொழி கேட்க செவியும் இரண்டு,
படிப்பறிவு இல்லாத படைத்தவனே..
என் எழில் கொஞ்சும் தேவதைக்காக துடிக்கும் இதயத்தை மட்டும் ஒன்றாய் வைத்தது ஏன்..!!!
என் இதயம் நின்றபின் அவள் துடிப்பதை யார் தடுப்பார்…!!!

உயிர் வலியோ.......!!!!!!


என் வாழ்வில் இனி அழுகை கிடையாது,
என்னை அழுக வைக்கும் வலியும், வேதனையும் விட.
நான் அழுது என் மகள் படும் கஷ்டமும், அவள் அனுபவிக்கும் துக்கமும் உணர்ந்தேன்.
உயிர் போகும் வலியோ.,
இல்லை உயிரே வலியோ.
கலங்க மாட்டேன், குழந்தையை கலங்க விட மாட்டேன்…!!

பயணம்.......!!!!


என் வாழ்க்கை பயணத்தில் இன்று முதல் ஒரு புதிய தேடலை தொடங்குகிறேன்.,
வழி தெரியாமல்,
திசை கூட அறியாமல்.,
இந்த பயணம் வாழ்கையை தேடி அல்ல.
உணர்ச்சியை உணர்ச்சிகள் ஏமாற்றும் "யதார்த்தத்தை" தேடி...!!
புல பட்டால் புண்ணியமே.,
ஏனெனில் நானும் பிழைத்துகொள்வேன் புதைபடாமல்....!!!!