Pages

Sunday, September 25, 2011

கைகூடிய காதல்..!!!

"நிலவே நிலவே முழு நேர நிலவே,
அழகே அழகே நீ தேயா அழகே",
என் காதல் அமுதே..
நம் நேசமும் மாறனும் சுவாசமாய்,
என் சுவாசமே நான் உன்னை சுவாசிப்பது எப்பொழுது…!!
பகலில் நிலவில்லை யார் சொன்னது…?
பெண்ணே நீ இருள் கண்டு சிந்திய உன் துளி கண்ணீர் தானே இரவில் நிலவாகுது..
உன் கரு விழிகள் இரண்டும் என்னை களவாடும் சொர்க்கம்,
உன் இதழ் ரேகைக்கு தானே என் உயிர் காக்கும் வலிமை உள்ளது,
இதை அறிந்த எனதுயிரும் உன் இதழ் முத்தம் வேண்டி சாகின்றது
மனதோடு மனம் முடித்து நாளாகுது
உயிரோடு உயிராக மனம் ஏங்குது ஒரு மண நாளை தேடுது.
கையோடு கை சேர்த்து நாம் போகலாம்,
இருவரும் முவராய் உரு மாறலாம்.
எத்தனை கோடிகள் ஆகினும், சாக வரம் ஒன்றை நாம் வாங்கலாம்.
ஆள் இல்லா தனி தீவில் குடி ஏராளம்,
நமகென்று தனி சாம்ராஜ்யம் உருவாக்கலாம்.
அந்த கோடையில் நீ தானே என்னை அழணும்.
ஆனந்தமாய் அழுது அழுது கண்கள் கரையணும்,
அதில் நாம் உறைந்து உருகி ஒன்றாய் சேரனும்,
நம்மை நாமே பிரிக்க முடியா பாச பிணைப்பை உருவாக்கணும்,
நம் உயிர் சேர்ந்து வந்த உயிருக்காக நாம் வாழனும் …!!!

No comments:

Post a Comment