Pages

Sunday, September 25, 2011

என் தங்கை...!!!

மலரே மலரே என் தாயின் மகளே,
இந்த பூமியினில் நீண்ட ஆயுள் கொண்ட மலர் நீயே.
அழகே அழகே நீ பார்பதெல்லாம் மாறுதே புதிதாய்.
நம் பந்தமும் சற்று மாறுதே அழகாய்..
உன் சின்ன சின்ன சிரிப்புகள் செல்லமான மொழி பேசும்,
நீ துள்ளி திரியும் நேரத்திலே பாரதமும் உன்னிடம் கையேந்தும்.
நீ பாட்டுப்படிக்கும் வேளையிலே குயில்கள் உன்னிடம் சரணடையும்.
செல்வங்கள் உன்னிடம் தோற்றதே மிச்சம்,
இல்லத்தில் சந்தோசம் தருவதில் நீ தானே உச்சம்.
இறைவனை தினமும் நான் துதித்ததுண்டு,
ஒரு வரத்தை பெற்றிட துடித்ததுண்டு,
பிறப்புக்கு இன்னொரு வாய்ப்பிருந்தால்,
அத்தனை பிறப்பிலும் தங்கை நீ வேண்டும் என்று..
அவன் இருப்பது நிஜம் என்றால் நடக்குமே நன்மைகள்..
தாய் தந்த முதல் பரிசு நீயே..
அவளுக்கு முதல் பரிசு நானே…
நான் பூலோக நரகத்தை பார்த்ததுண்டு, உன்னை பிரிந்த நாட்களிலே.
மேலும் நரகத்தை பார்பேனே நீ விவாகம் கொள்ளும் நாளன்று,
உன் பிரிவினை தாங்க என் பிரனத்தில் வலுவில்லை.
மீண்டும் மழலைக்கே சென்று பிரிவினை வெல்வோமா..!!!

No comments:

Post a Comment