Pages

Sunday, September 25, 2011

விளங்கவில்லை....!!!!!


உள்ளம் ஒரு மாயயை.
அதில் உள்ளது மட்டுமே உண்மை.
மனம் என்பது வெறுமை,
அது கொண்டதோ அன்பை.
உயிர் வெறும் உணர்வே,
பிரிவில் மட்டுமே உணரபடுமோ..!!
உள்ளதையும் மனதையும் இணைப்பது இதயமா...!!
உயிருக்காக பதட்டத்தில் துடிக்கும் உறுப்பினால்   சாத்தியமோ..!!
சற்று சிந்தித்தல் எல்லாம் சாமி தான்,
இல்லவே இல்லை.
வர போவதும் இல்லை.
நம்பினேன்,
நிற்கிறேன்,வீதியில்...!!!

என் தங்கை...!!!

மலரே மலரே என் தாயின் மகளே,
இந்த பூமியினில் நீண்ட ஆயுள் கொண்ட மலர் நீயே.
அழகே அழகே நீ பார்பதெல்லாம் மாறுதே புதிதாய்.
நம் பந்தமும் சற்று மாறுதே அழகாய்..
உன் சின்ன சின்ன சிரிப்புகள் செல்லமான மொழி பேசும்,
நீ துள்ளி திரியும் நேரத்திலே பாரதமும் உன்னிடம் கையேந்தும்.
நீ பாட்டுப்படிக்கும் வேளையிலே குயில்கள் உன்னிடம் சரணடையும்.
செல்வங்கள் உன்னிடம் தோற்றதே மிச்சம்,
இல்லத்தில் சந்தோசம் தருவதில் நீ தானே உச்சம்.
இறைவனை தினமும் நான் துதித்ததுண்டு,
ஒரு வரத்தை பெற்றிட துடித்ததுண்டு,
பிறப்புக்கு இன்னொரு வாய்ப்பிருந்தால்,
அத்தனை பிறப்பிலும் தங்கை நீ வேண்டும் என்று..
அவன் இருப்பது நிஜம் என்றால் நடக்குமே நன்மைகள்..
தாய் தந்த முதல் பரிசு நீயே..
அவளுக்கு முதல் பரிசு நானே…
நான் பூலோக நரகத்தை பார்த்ததுண்டு, உன்னை பிரிந்த நாட்களிலே.
மேலும் நரகத்தை பார்பேனே நீ விவாகம் கொள்ளும் நாளன்று,
உன் பிரிவினை தாங்க என் பிரனத்தில் வலுவில்லை.
மீண்டும் மழலைக்கே சென்று பிரிவினை வெல்வோமா..!!!

என் தேவதை...!!!!!

உன்னை காணத நாட்களில்.
பூவை கண்ட தேனீ போல் இருந்த நான்,
சூரியனை கண்ட பனி துளி போல் உருகினேன்...
நீ என்னை கோபிக்கும் வேலையில்,
மழையை கண்ட மயில் போல் இருந்த நான்,
புயலை கண்ட புல் போல் மாறினேன்..
நீ என்னை ஒதுக்கிய வேலையில்,
இதழ் காணும் சிரிப்பாய் இருந்த நான்,
உயிர் சிந்திய உடலாகிறேன்..
உனது ஒரு பாச பார்வையும், பூ போன்ற புன்னகையும் பார்த்தால்.
சுவராய் இருக்கும் நான்,
சித்திரமாய் மாறுவேன்..
வெறும் மண்ணாய் இருக்கும் நான்,
விஸ்பருபமும் எடுப்பேன்..
உன் வாய் சொல்லும் ஒரு வார்த்தைக்கு நான் அடிமை,
பிணமாகி புதைந்தாலும் புதிதாய் பிறந்திடுவேன்,
அந்த ஒரு வார்த்தையின் வலிமையாலே...!!
உன்னை பிரிந்து வாழும் பக்குவம் எத்தனை பிறப்பு கொண்டாலும் எனக்கு வரப்போவதில்லை,
எனவே என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு,
உன் மரணத்தில் மட்டும் என்னை ஜோடி சேற்றுகொள்....!!!!!

உயிர் வாங்கும் வலி......!!!

உயிர் வாங்கும் உயிர்கள் வாழும் ஒப்பற்ற உலகம் இது.
கருவறை கடந்தது முதல் பல கோடி கண்ணீர் சிந்திய கண்கள் இன்னும் அழுகிறது உறவுகளுக்காக,
இத்தனை சிறிய கண்ணில் இன்னும் எத்தனை துளி கண்ணீர்...!?!
பதில் கண்ணீருக்கே தெரியாது...
விளை நிலம் என்றபோதும் உரம் தேடும் இந்த உலகில்.,
உரமாக புழுக்களுக்கு உணவான பின்பும்,
புழுக்களின் தாகம் தீர்க்க அழுகும் கண்கள்.
உணர்ச்சியே இல்லாத உன்னதமான அன்பிற்காக அழுகாமல் போகுமா.......!!!!!

வாழ்க்கை...!!!

எத்தனை உறவுகள்,
அத்தனையும் கானல் நீர் தான்.
உரிமைகொள்ள உரிமையே இல்லை.
என் உயிர் உறவுகளுக்கு உதிரத்தையும் தருவேன்,
அன்பான இதயங்கள் கால் செருப்பை கழுவ என் உதிரத்தை கேட்டன..
இந்த வாழ்க்கை விளையாட்டின் சட்டதிட்டங்கள் சற்றும் புலப்படவில்லை,
என்னவாகினாலும் ஆட்டத்தை நான் முடிக்க விரும்பவில்லை,
என்னை இந்த ஆட்டம் முடிக்கட்டும் முழு மனதாய் கேட்கிறேன், காத்து கொண்டு இருக்கிறேன்…!!
என் இதயம் போடும் தாளம் நிற்கட்டும், சற்றே இந்த ஆட்டமும் முடியட்டும்…!!!

தனிமை...!!!

தனிமையில் இனிமை,
உண்மையிலே புதுமை.
நான் சொன்ன சொல்லை தாங்காத மேகம்,
நான் போகும் வழி எல்லாம் என்னை தொடர்ந்து அழுதே.
நான் சொன்னது சரியா. !
இல்லை வானம் புரிந்தது பிழையா.!
ஒரு வழியாய் முதல் முறையாய் நான் உணர்ந்தேனே நிஜத்தை,
இதை எதிர்ப்பது சரியோ. .!
சொல்லடி மழையே. .!

மரணம் எங்கே......!!!!

மரணம் எங்கே.
அதன் விலாசம் அறிந்தவன் எங்கே,
மாற்றானின் மரணத்தை ஏற்கும் மந்திரம் எங்கே,
பட்டியலில் பெயரை முன்னுரிமை படுத்த லஞ்சம் என்னவோ..!
இல்லை இதை பார்க்கும் மேலாளர் எவனோ..!
போதுமட சாமி உன் வரம் என்னும் இந்த வாழ்க்கையும், நீ புறம் வைக்கும் புதிரும்.!!

நட்பு...!!!

நாளைய கனவை இன்றே நிஜத்தில் நடக்க செய்பவன் நண்பன் நீ கொள்ளும் சிறு வெற்றிக்கும் , சிலை வைக்க துடிப்பவள் தன் தோழி!!!
சின்னஞ்சிறிய மனதில் ஒரு செங்கோல்
நடத்தும் உலகம் - அது நட்பு!!!!
வழக்கை விழும்பில் விடையின்றி
நின்றாலே விளங்காத கேள்விக்கும் விடை சொல்ல வருவானே!!..,
உன் கை விரல் பிடித்து வாழ்கையின் வழி சொல்லி தருவானே!!!!
என் துளி கண்ணீரின் வசம் அவன் அறிவான்-
அவன் பாசம் நான் அறிவேன்!!
யார் செய்த புண்ணியமோ???,நான் அடைந்தேன் இது போல உன்னதமான உள்ளங்களை !!

புரட்சி.......!!!!

வெட்டருவாளும், வேல்கம்பையும் வான் உயர்த்தி எடு..
வெறும் வீரம் மட்டும் படு,
தலை குனியாதே, தரம் கெட்டு கிடக்கும் தாயகத்தை பார்க்காதே.
சென்னை கோட்டைக்கோ. இல்லை செங்கோட்டைகோ. சென்று முற்றுகை இடுவோம்.
முழங்கால் செத்தவனையும், மூளை கெட்டவனையும் முதன்மை படுத்தாதே என்று சட்டம் ஒன்றை அமைப்போம்.
இல்லையேல் புறப்படுவோம் நேதாஜியையும், பகவத்சிங்கையும் பக்கபலமாய் வழி நடத்திட அழைத்து வருவோம்..
புது தாயகத்தை பெற்றிட “தாயாய்” மாறுவோம்..
புழுத்த அரசியலை அடித்து திருத்த “அப்பனாய்” மாறுவோம்.
ஒடுங்கி கிடக்கும் தேசத்தை நிமித்திட “நண்பனாய்” மாறுவோம்..
கஷ்மிரின் பனி மலை கூட உருகட்டும் நம்பலின் குருதி கொதிப்பில்..
கொதிக்கும் ரத்தம் குறையுமுன்,
துடிக்கும் நரம்பு தளரும்முன் .,
உடலின் உயிர் நிற்கும்முன்.,
பிறந்த பிறப்புக்கும், இருக்கும் இளைமைக்கும் உருப்படியாய் இந்த தேசத்தை மாற்றி அமைப்போம்.
"வாலிபமே வலிமை"..!!
இது வெறும் வாய் சொல் இல்லை என்று உணர்த்த ஓடி வாருங்கள்...!!

கைகூடிய காதல்..!!!

"நிலவே நிலவே முழு நேர நிலவே,
அழகே அழகே நீ தேயா அழகே",
என் காதல் அமுதே..
நம் நேசமும் மாறனும் சுவாசமாய்,
என் சுவாசமே நான் உன்னை சுவாசிப்பது எப்பொழுது…!!
பகலில் நிலவில்லை யார் சொன்னது…?
பெண்ணே நீ இருள் கண்டு சிந்திய உன் துளி கண்ணீர் தானே இரவில் நிலவாகுது..
உன் கரு விழிகள் இரண்டும் என்னை களவாடும் சொர்க்கம்,
உன் இதழ் ரேகைக்கு தானே என் உயிர் காக்கும் வலிமை உள்ளது,
இதை அறிந்த எனதுயிரும் உன் இதழ் முத்தம் வேண்டி சாகின்றது
மனதோடு மனம் முடித்து நாளாகுது
உயிரோடு உயிராக மனம் ஏங்குது ஒரு மண நாளை தேடுது.
கையோடு கை சேர்த்து நாம் போகலாம்,
இருவரும் முவராய் உரு மாறலாம்.
எத்தனை கோடிகள் ஆகினும், சாக வரம் ஒன்றை நாம் வாங்கலாம்.
ஆள் இல்லா தனி தீவில் குடி ஏராளம்,
நமகென்று தனி சாம்ராஜ்யம் உருவாக்கலாம்.
அந்த கோடையில் நீ தானே என்னை அழணும்.
ஆனந்தமாய் அழுது அழுது கண்கள் கரையணும்,
அதில் நாம் உறைந்து உருகி ஒன்றாய் சேரனும்,
நம்மை நாமே பிரிக்க முடியா பாச பிணைப்பை உருவாக்கணும்,
நம் உயிர் சேர்ந்து வந்த உயிருக்காக நாம் வாழனும் …!!!

சுகம்...!!!

வாழும் காலம்,
இது வசந்தகாலம்.
மேகத்தில் கேட்டிடும் பல குயிலின் ராகம்.
பாடாத பாடலும் பல விதமாய் ஒலித்திடும்.
பசி என்ற சொல்ளின் அர்த்தமும் மறந்திடும்.
புதிதாய் பால வர்ணங்கள் ஜொலித்திடும்,
எல்லாம் ஒரு மின்னலை போல் பாயிந்திடும்.
இந்த மாயங்கள் எல்லாம் ஒரு சொல்ளின் சொர்க்கம்,
இந்த சொல் என்னும் உறவு இல்லாமல் போனால்.
என் உடலை நான் சுமந்திட மறவேன். . .!!!

அறியாமல் அறிந்தேன்....!!!

மெல்ல வருடும் காற்றும்,
என்னை முத்தம் இட்டு தொடுதே,
அவள் தூது சொன்ன வார்த்தை இது தானோ.!!
காற்றோடு மற்றும் காதல் பேசிடு,
கனவிலும் கூட கிடையாது இந்த வழக்கை..!!
போழுதகவில்லை,
பூ வாட வில்லை,
புதிதாய் என் பகலும் இருளில் முழ்குதே..
காரணம் கேட்டால் காதல் என்று சொலுதே.
எதற்கு இங்கு வந்தால்,!!
சுடர் ஒன்றை தந்தாள்.!
எனக்காக மட்டும் துடித்த எனது உயிரை,
ஒரு தயக்கமும் இன்றி வசியம் செய்தால்.
சிரிக்க வேய்க தெரிந்தவனை,
கதறி அழுதிட செய்தவளே.
இன்னும் என்னிடம் எதுவும் இல்லை நீ கொண்டிட,
என்னை கொன்றது போதும் புதைத்திடு பெண்ணே.. .!!!

பேனா....!!!!

புகழும், புலமையும்., பொரிக்கும் பேனா..
துடகங்களை முடித்திடவும்.,
முடிவிற்காக துடங்கிடவும்.,
தலைகுனியும் ஒரே தலைவன்.
இவனது தலை தாழ்ந்தாள் திறக்காத கதுவும் திறக்கும்.,
கிடைக்காத பதிலும் கிடைக்கும்..
சமுகத்தில் சிந்த படும் செங்குரிதிகளுக்கு உயிர் கொடுப்பது இதில் இருக்கும் நீல ரத்தமே.,
சரித்திரத்தை மாற்றிடும் ஒரு செங்கோல்.,
சாதனை படைக்கும் ஒரு சிறு முள்..
உண்மைக்கு குரல் குடுக்கும் ஒரு உயிர் இல்ல உயிர்..!!!

ஏமாற்றங்கள் இது தானோ...!!!

எதிர் பாத்து எதிர் பாத்து என்னை நானே கொள்ளும் கடைசி கட்ட காட்சியும்.,
என்னுள்ளே எனக்காக என்னலே எழுதப் பட்ட கல்வெட்டும்.,
இல்லாத ஈசனை என் வரம் வேண்டி கிடப்பதும்.,
பித்து பிடித்த பாசத்தை பிள்ளை இடம் தேடினால்...!!!
இது அனைத்தும்தான் எமற்றன்களோ...!!!!

ஏக்கம்...!!!!

அடிக்கட்டும் உடுக்கையை,
தொடங்கட்டும் பூசையை.
விடை கொடு பூமியே...!!!
போகிறேன் சம்பாளாய்...,!!!
துப்பு கெட்ட மானிடன், நான் தப்பு செய்தது துரோகமா...!?!
மறந்திட வேண்டினேன் தவறை,
மன்னிதிடவே மனம் இன்றி.
மறக்க பட்டேனே.
உயிர் மனங்களால்...!!!