Pages

Wednesday, April 25, 2012

இனிய பொழுது...!!!


அதிசயமாய் அன்று
விடியல் கண்டேன்..

இதயம் பட படக்க
காரணம் தேடினேன்..

அபூர்வமாய் அவள்
மின்னஞ்சல்....

அற்புதமாய் என்னுள்
மாற்றம் செய்தாள்...

வசிக்கும் இடம் தெரியாமலே
என் வாழ்வை  அவள் வாழ்ந்தாள்..

நிறம் அறியாமலே
என் இரவுகளை
பௌர்ணமியாக்கினாள் ..

நேரில் பாராமலே
நெற்றி முட்டி
கண்கள் பேசியபடியே
கனவுகளோடு காலம் கழிந்தது..

காணும்  முகவரி
ஒரு நாள் கொடுத்தாள்.

கண்டுவிட ஓடினேன்
அவள் திசை தேடி..

காதலி தான் வருவாள்
வாரி அணைக்கலாம்
என கண் மூடி
கை விரித்த வேளையில்..

காலை கட்டிய படி
மழலை ஒன்று என் முன்னே..

கேள்விகளோடு  கண் விழித்த
என் முன்னே
கணவனோடு  காட்சி தந்தாள்
என் கனவுக் கன்னி...

அந்த நொடி காதலோடு
கனவும் முடிய
அவள் சுட்டு போட்ட
ரொட்டியோடு மட்டுமே
ஊர் திரும்பினேன்..!!!

No comments:

Post a Comment